பஞ்சு போல கொழுக்கட்டை செய்வது எப்படி?

ஈஸியான தேங்காய் வெல்ல பூரண கொழுக்கட்டை செய்வது எப்படி என தெரிந்துக்கொள்ளுங்கள்...

Social Media

தேவையான பொருட்கள்: அரிசி மாவு - 1 கப், உப்பு - 1/2 டீஸ்பூன், தண்ணீர் - தேவையான அளவு, உப்பு

பூரணம் செய்வதற்கு தேவையான பொருட்கள்: துருவிய தேங்காய் - 1/2 கப், வெல்லம் - 1/4 கப், ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை

செய்முறை : அரிசி மாவு, உப்பு சேர்த்துக் கிளறி, சுடுநீரை கொஞ்சமாக ஊற்றி கரண்டியின் பிடியைக் கொண்டு கிளறி விட வேண்டும்.

பின்பு மாவு சற்று வெதுவெதுப்பான நிலைக்கு வந்த பின்னர், கையால் மென்மையாகப் பிசைந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

Social Media

அடுத்து பூரணம் செய்ய கொதித்த நீரில் கரைத்து வடிகட்டிய வெல்ல நீருடன் துருவிய தேங்காய் சேர்த்து அதை அடுப்பில் வைத்து கிளறவும்.

பூரணம் மெல்ல மெல்ல இறுகி வரும் போது ஏலக்காய் பொடி சேர்த்து, சிட்டிகை உப்பையும் சேர்த்து இறக்கவும்.

Social Media

பின்னர் மாவின் இடையில் பூரணம் வைத்து உங்களுக்கு பிடித்த வடிவத்தை உருவாக்கி வேக வைத்து எடுக்கவும்.

Social Media

வீடே மணக்கும் ரசம் வைக்க... ஸ்பெஷல் ரசப்பொடி செய்வது எப்படி?

Follow Us on :-