குக்கரில் சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி??
பொங்கல் திருநாளை முன்னிட்டு குக்கரில் சர்க்கரை பொங்கல் செய்து அசத்னுமா? இதோ செய்முறை...
Social Media
பச்சரிசி – 1 கப், பாசி பருப்பு – 1/4 கப், வெல்லம் – 1 1/2 கப், பால் – 2 கப், முந்திரி மற்றும் உலர் திராட்சை – 10 to 15, ஏலக்காய் தூள், நெய் – தேவையான அளவு
பாசி பருப்பு மிதமான தீயில் வறுத்து எடுத்து பச்சரிசியுடன் சேர்த்து நன்றாக கழுவி பின்னர் சுமார் 10 நிமிடம் வரை ஊற வைக்கவும்.
Social Media
ஒரு குக்கரில் 10 நிமிடம் வரை ஊறிய பச்சரிசி, பாசிப்பருப்புடன் இரண்டரை கப் தண்ணீர் மற்றும் 2 கப் அளவு பால் ஊற்றி மூன்று விசில் வரும் வரை வேக விடவும்.
விசில் வரும் சமயத்தில் வெல்லத்தை தூள் செய்து தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து கம்பி பதத்தில் பாகை எடுத்துக்கொள்ளவும்.
Social Media
குக்கர் விசில் அடங்கியதும் அடுப்பு மிதமான தீயில் வைத்து பச்சரிசி, பாசிப்பருப்பு கலவையுடன் வெல்லப்பாகை சேர்த்து மசித்த வண்ணம் கிளறவும்.
Social Media
நன்றாக கிளறியதும் சிறிது ஏலக்காய் தூள் பின்னர் நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை, தேவைப்பட்டாஅல் கூடுதல் நெய் சேர்த்து கலந்து பரிமாறவும்.
Social Media
lifestyle
பச்சை மிளகாயில் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா?
Follow Us on :-
பச்சை மிளகாயில் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா?