விநாயகர் சதுர்த்தி நாளான இன்று பிள்ளையருக்கு பிடித்த கொழுக்கட்டை வகையான் பிடி கொழுக்கட்டையை செய்வது எப்படி என தெரிந்துக்கொள்ளுங்கள்...
Social Media
தேவையான பொருட்கள்: அரிசி மாவு - 1/2 கப் , வெல்லம் - 1/4 கப், தண்ணீர் - 1 1/4 கப், துருவிய தேங்காய் - 1/4 கப், ஏலக்காய்ப் பொடி - 1 டீஸ்பூன், எண்ணெய் - சிறிதளவு
செய்முறை: அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி வெல்லத்தை இடித்து போடவும்.
வெல்லம் கரைந்ததும் அதனை வடிக்கட்டி, வேற் ஒரு பாத்திரத்தில் மாற்றி, மீண்டும் அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும்.
வெல்லம் மெல்லிய பாகு பதத்திற்கு வரும். அப்போது அதில் ஏலக்காய்ப் பொடி, தேங்காய் தூவி கிளறி விடவும்.
பின்னர் தீயைக் குறைத்து, அதில் அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டி வராதவாறு கிண்டவும்.
Social Media
மாவு பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும் போது அடுப்பை அணைத்து, சற்று ஆற விடவும்.
Social Media
மாவு வெதுவெதுப்பான நிலையில் இருக்கும் போது, கைகளில் எண்ணெயைத் தடவிக் கொண்டு கொழுக்கட்டை வடிவத்தில் பிடிக்கவும்.
Social Media
இப்போது அதை இட்லித் தட்டில் வைத்து, 10 நிமிடம் வேக வைத்து இறக்கினால் பிடி கொழுக்கட்டை ரெடி.