எண்ணெய் அதிகமாக குடிக்காத உளுந்து வடை அல்லது மெது வடை எப்படி செய்வது என தெரிந்துகொள்வோம்...
Social Media
ஒரு கப் உளுந்தை நன்றாக கழுவி, அதில் மூன்று கப் தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் நன்றாக ஊறவைக்கவும்.
ஒரு மணி நேரம் கழித்து, ஊறவைத்த தண்ணீரை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
உளுந்தை மிக்ஸியில் சேர்த்து, அத்துடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து 3 முறை அரைக்கவும். உளுந்து ஊரவைத்த தண்ணீரை பயன்படுத்தவும்.
உளுந்து அரைபட்டதும், அதில் 4 துண்டுகள் உருளைகிழங்கை சேர்த்து அரைக்கவும்.
இந்த மாவை ஒரு பாத்திரத்தில் கொட்டி, அதில் உப்பு, நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, கருவேப்பில்லை, இடித்த மிளகு, 2 ஸ்பூன் பச்சரிசி மாவு சேர்த்து கலக்கவும்.
Social Media
வடைக்கு தேவையான எண்ணெய் எடுத்து வடை தட்டி அதில் பொறித்து எடுங்கள். கண்டிப்பாக வடை எண்ணையை குடிக்காது.