கேரள ஸ்பெஷல் சுலைமானி டீ - செய்வது எப்படி?

சுலைமானி சாய் அல்லது டீ மசாலா கலவை கொண்டது. இதனை வீட்டில் செய்வது மிகவும் எளிது.

Social Media

தேவையான பொருட்கள்: தண்ணீர் - 2 கப், துருவிய இஞ்சி, கிராம்பு - 2, பட்டை - 1/4 இன்ச், ஏலக்காய் - 2, சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன், டீ தூள் - 1 டீஸ்பூன், எலுமிச்சை சாறு

செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு 2 நிமிடம் கொதிக்க விடவும்.

பின்பு அதில் டீ தூள் சேர்த்து கிளறி, நிறம் மாறும் வரை கொதிக்கவிட்டு இறக்கி விட வேண்டும்.

பின்னர் இதில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி ஒரு நிமிடம் மூடி வைத்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.

இறுதியாக இதை வடிகட்டி இதன் மேல் புதினா போட்டால் சுவையான சுலைமணி டீ ரெடி.

Social Media

குறிப்பு: இந்த டீயில் சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை சேர்த்துக் கொள்ளலாம்.

Social Media

கத்தரிக்காய் சாப்பிட்டால் தோல் பிரச்சினை வருமா?

Follow Us on :-