சூப்பரான டேஸ்ட்டான இட்லி பொடி ஈஸியா செய்யலாம்!

இட்லி, தோசைக்கு சட்னி, சாம்பார் தாண்டி பலரது விருப்பமாக இருப்பது இட்லி பொடி. சுவையான நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும் இட்லி பொடியை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி என பார்ப்போம்.

Various Source

தேவையான பொருட்கள்: உளுந்து, கடலைப்பருப்பு, எள், வரமிளகாய், பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலை

வாணலியில் எண்ணெய் விட்டு உளுந்து, கடலைப்பருப்பு, எள்ளை தனித்தனியாக வறுத்து ஆறவைக்க வேண்டும்

வரமிளகாயை தனியாக வறுத்து ஆற வைத்துக் கொள்ள வேண்டும்.

வறுத்த பொருட்களை மிக்ஸியில் போட்டு பெருங்காயம், உப்பு சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும்

அதனுடன் கறிவேப்பிலையை எண்ணெய்யில் வறுத்து சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.

இட்லி பொடியை காற்று புகாத டப்பாவில் வைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்

காலையில் வெதுவெதுப்பான நீரை குடித்தால் என்ன நடக்கும்?

Follow Us on :-