அடுத்தடுத்து விநாயகர் சதுர்த்தி, கோகுலாஷ்டமி என பண்டிகைகள் வருகின்றன. இந்த பண்டிகைகளுக்கு எளிதாக செய்யக்கூடிய பதார்த்தங்கள் சில உள்ளன. எளிதாக ஓலைப்பக்கோடா எப்படி செய்யலாம் என பார்ப்போம்.
Various Source
தேவையான பொருட்கள்: கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், சோடா மாவு, எண்ணெய், உப்பு தேவையான அளவு.
3 கப் கடலை மாவுக்கு 1 கப் அரிசி மாவு என்ற விகிதத்தில் இரண்டு மாவையும் எடுத்துக் கொள்ளவும்.
இரண்டு மாவையும் நன்றாக கலந்து சலித்து எடுத்துக் கொள்ளவும்.
அதில் உப்பு, மிளகாய் தூள், சோடா மாவு சேர்த்து தண்ணீர் ஊற்றி பிசையவும்.
Various Source
முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து கொண்ட பின் கடாயில் எண்ணெய் விட்டு கொதிக்க விடவும்.
Various Source
முறுக்கு பிழியும் அச்சில் ரிப்பன் அச்சு வைத்து மாவை இட்டு கடாயில் பிழிந்து எடுக்க வேண்டும்.
பொன்னிறமாக வறுந்தவுடன் எடுத்து ஆற வைத்தால் சுவையான ஓலைப்பக்கோடா தயார்.