சிவப்பான மொறு மொறு தோசை சுட இதை செஞ்சா போதும்!

தோசை என்றாலே பலருக்கும் பிரியம். அதுவும் கடைகளில் நீட்டமாக முறுகலாக சுடும் தோசைகள் பலரது விருப்பமாய் உள்ளது. வீடுகளில் சுடும் தோசை முறுகலாக சிவந்து ஹோட்டல் ஸ்டைலில் வர இதோ சில டிப்ஸ்

Instagram

இட்லிக்காக அரைத்த மாவில் தோசை ஊற்றாமல் தோசைக்காக தனி வாவு அரைத்து தோசை சுடுவது சிறப்பு.

தோசைக்கு மாவு அரைக்கும் போது வெந்தயம், ஒரு பங்கு பச்சரிசி கூடுதல் சேர்த்துக்கொண்டு அதோடு இரண்டு கைப்பிடி அவல் சேர்க்கனும்.

அவல் இல்லாவிட்டால் சிறிதளவு ஜவ்வரிசி சேர்த்து மாவு அரைத்து தோசை வார்த்தால் தோசை மொறு மொறு என்று வரும்.

தோசை மாவை அதிகம் புளிக்க விடக்கூடாது. தோசைக்கல்லை புளி அல்லது வெங்காயம் பயன்படுத்தி பதத்திற்கு கொண்டுவரலாம்.

Instagram

இட்லி மாவில் தோசை சுடும் கட்டாயம் ஏற்பட்டால் ஒரு கரண்டி சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கி தோசை ஊற்றி பரிமாரலாம்.

தோசையை முடிந்தளவு மெல்லிதாக தேய்க்கனும், திருப்பி போடுவதை தவிர்க்கனும்.

தோசைக்கு சப்பாத்திக்கு கல்லை அதிகம் சூடுடாக்குவதை போல விடக்கூடாது. மிதமான சூடு போதுமானது.

தொடர்ந்து 10 மணி நேரத்திற்கும் மேல் வேலை செய்தால்..?

Follow Us on :-