15 நிமிடத்தில் அசத்தல் சமையல் - பட்டர் கார்லிக் மஷ்ரூம் செய்வது எப்படி?

பட்டர் கார்லிக் மஷ்ரூம் அல்லது வெண்ணெய் பூண்டு காளான் 15 நிமிடங்களில் நீங்கள் செய்து அசத்துக்கூடிய எளிய சமையல் ஆகும். எப்படி செய்யலாம்னு பார்ப்போம்….

Social Media

தேவையான பொருட்கள்: 1 கப் காளான் - சுமார் 100 கிராம், 1 தேக்கரண்டி வெண்ணெய், 1 தேக்கரண்டி பூண்டு நறுக்கியது, 1 தேக்கரண்டி மிளகு பொடி, 1 தேக்கரண்டி தைம் / கலப்பு மூலிகைகள் (Italian herbs), உப்பு, கொத்தமல்லி

செய்முறை: 1. காளானை நன்கு கழுவி சுத்தம் செய்து, மெல்லியதாக நறுக்கி தனியாக வைக்கவும்.

2. ஒரு கடாயில் வெண்ணெய் உருகவும், இதனுடன் பூண்டு சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். பின்னர் காளான் சேர்க்கவும்.

3. இதனை ஒரு நிமிடம் வதக்கவும், ஒரு நிமிடம் சமைக்கவும், பின்னர் மீண்டும் வதக்கவும்.

4. காளானில் இருந்து தண்ணீர் வெளியேறும், எனவே அது உலரும் வரை சமைக்கவும்.

Social Media

5. பின்னர் மிளகு, இடாலியன் ஹெர்ப்ஸ், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

Social Media

6. கடைசியாக கொத்தமல்லி தழை சேர்க்கவும். ஒரு நிமிடம் வதக்கிய பின் அணைக்கவும். இபோது பூண்டு பட்டர் கார்லிக் மஷ்ரூம் தயார்.

Social Media

தூக்கி வீசப்படும் பப்பாளி விதைகளில் இவ்வளவு இருக்கா?

Follow Us on :-