இட்லி மாவில் போண்டா போடலாம் வாங்க!
வீட்டில் இட்லி அல்லது தோடைக்காக அரைத்த மாவு இருந்தால் 10 நிமிடத்தில் சூப்பராய் மெது போண்டா சுடலாம்.
Webdunia
வீட்டில் இருக்கும் மாவில் தேவையான அளவு உப்பு, சீரகம், மிளகு, இஞ்சி துருவல், நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்துக்கொள்ளவும்.
மாவு தண்ணீராக இருக்கும் பட்சத்தில் அடுப்பில் வைத்து 3 நிமிடங்களுக்கு மாவு கெட்டிப்பிடிக்கும் வரை கிளறி எடுத்துக்கொள்ளவும்.
மாவு சூடு ஆறிய பின்பு பொடியாக நறுக்கிய கருவேப்பிலை, கொத்தமல்லி, வெங்காயம் சேர்த்துக்கொள்ளவும்.
அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி நன்றாக சூடு படுத்தி மிதமான தீக்கு மாற்றிக்கொள்ளுங்கள்.
பின்னர் மாவை சிறு சிறு உருண்டைகளாக போட்டு பொன்னிறமாக சிவக்க வைத்து எடுத்தால் போண்டா ரெடி.
இந்த மாவில் போண்டா மட்டுமல்லாமல் மெதுவடையாகவும் போட்டு சாப்பிடலாம்.
Webdunia
புதுசாக அரைத்த புளிக்காத இட்லி தோசை மாவில் இதை செய்வது சுவையை கூடுதலாக கொடுக்கும்.
Webdunia
lifestyle
வீட்டிலேயே செய்யலாம் சுவையான பேன் கேக்! Christmas Special pancakes!
Follow Us on :-
வீட்டிலேயே செய்யலாம் சுவையான பேன் கேக்! Christmas Special pancakes!