20 நிமிடத்தில் அதிரடி அதிரசம் செய்வது எப்படி?

தீபாவளிக்கு இனிப்பு வகைகளில் அதிரத்திற்கு முக்கிய இடம் உண்டு. இதனை எப்படி செய்வது என தெரிந்துக்கொள்ளுங்கள்...

Social Media

தேவையான பொருட்கள்: கோதுமை - 1 கப், பச்சரிசி மாவு - 1/2 கப், வெல்லம் - 1 ½ கப், தண்ணீர் - 1 ½ கப், உப்பு, ஏலக்காய் பொடி, நெய், எண்ணெய்

செய்முறை: கோதுமை மாவு , பச்சரிசி மாவு இரண்டையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் தண்ணீரை சேர்த்து கொள்ளவும், வெல்லம் கரைந்ததும். அதை வடிகட்டவும்.

தொடர்ந்து மீண்டும் இதை கொதிக்க வைக்கவும் அதில் ஏலக்காய் பொடி, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துகொள்ளவும்.

Social Media

நன்றாக ஒட்டும் பதம் வந்ததும், அதில் மாவை சேர்த்து கிளர வேண்டும். தொடர்ந்து நெய் சேர்த்து கொள்ளவும்.

Social Media

இதை சிறிது நேரம் அப்படியே விட்டு தொடர்ந்து அதை உருண்டைகளாக மாற்றி, நெய் தடவிய வாழை இலையில் அதிரசம் தட்டவும்.

Social Media

இதை கொதிக்கும் எண்ணெய்யில் போட்டு அதிரசம் நன்றாக வெந்து வந்ததும் எண்ணெயை அழுத்தி எடுத்தால் அதிரடி அதிரசம் ரெடி.

Social Media

தீபாவளியின் போது ஆஸ்துமா நோயாளிகளுக்கான குறிப்புகள்!

Follow Us on :-