தக்காளி விலை தறிக்கெட்டு உயர்ந்து வரும் நிலையில் தக்காளி தட்டுப்பாட்டால் மக்களும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். வாங்கிய தக்காளிகள் அதிக நாள் கெடாமல் பாதுகாப்பது எப்படி என பார்ப்போம்.
Various Source
தக்காளி வாங்கும்போது மொத்தத்தையும் பழமாக வாங்காமல் அரை பழம், காய்களையும் சேர்த்து வாங்கலாம்.
அப்படி வாங்கும்போது தினசரி சில தக்காளி பழங்கள் பழுக்கும். மற்றவை கெடாமல் இருக்கும்.
அதிகமாக பழுத்த தக்காளிகள் இருந்தால் அவற்றை ஃப்ரிட்ஜில் அறை வெப்பநிலையில் பாதுகாக்க வேண்டும்.
சூரிய வெளிச்சம் படாதவாறு தக்காளிகளை காம்பு பகுதி தரையில் படுமாறு கவிழ்த்து வைத்திருந்தால் சீக்கிரம் கெட்டுப் போகாது.
ஈரப்பதம் உள்ள பகுதிகளில் தக்காளில் வேகமாக கெட்டுப் போகும் என்பதால் ஈரப்பதம் இல்லாத பகுதிகளில் சேமிப்பது அவசியம்
சேமித்து வைத்திருக்கும் தக்காளியில் ஒன்று கெட்டுப் போனாலும் உடனே அதை அகற்றி விடுவது நல்லது.
இல்லையென்றால் அது மற்ற தக்காளிகளும் விரைவில் கெட்டுப்போக செய்து விடும்.