செயற்கையாக பழுக்க வைத்த மாம்பழத்தை கண்டறிவது எப்படி?
தற்போது மாம்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களும் விற்பனையாகின்றன. இவை உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும். செயற்கை மாம்பழங்களை கண்டறிவது குறித்து அறிவோம்
Instagram
செயற்கையாக பழுக்க வைத்த மாம்பழங்களை சாப்பிடுவதால் நீரிழிவு நோய், தைராய்டு, கர்ப்பப்பை பிரச்சினைகள் ஏற்படலாம்.
செயற்கை மாம்பழங்கள் உடலில் ஹார்மோன் மாற்றத்தை ஏற்படுத்துவதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
இயற்கையாக பழுத்த மாம்பழம் தண்ணீரில் மூழ்கி போகும். செயற்கையாக பழுத்தவை நீரில் மிதக்கும்.
பவுடர் போட்டு பழுக்க வைக்கப்பட்ட பழங்களின் தோல் மேல் வெள்ளை பூத்தது போல காணப்படும்.
Instagram
செயற்கை பழங்களை முகர்ந்து பார்த்தால் அதில் மாம்பழ வாசனை தெரியாது.
Instagram
செயற்கை மாம்பழத்தின் சுவை புளிப்பும் இல்லாமல், இனிப்பும் இல்லாமல் இருக்கும்.
இயற்கையாக பழுத்த பழத்தின் தோல் சற்று கொழ கொழவென இருக்கும். செயற்கை பழங்களின் தோல் கெட்டியாக இருக்கும்.