பலருக்கு இளம் வயதிலேயே முடி உதிர்தல், நரை முடி பெரும் பிரச்சினையாகி வருகிறது. சில தவறுகளை செய்வதால் இளம் வயதிலேயே தலை வழுக்கை ஆகும் அபாயம் உள்ளது. அதுகுறித்து பார்ப்போம்.
Various Source
பல்வேறு அக மற்றும் புற காரணிகளால் இளம் வயதிலேயே முடி உதிர்ந்து வழுக்கை தலை ஏற்படுகிறது.
உடலில் உள்ள ஆண்ட்ரோஜன் அளவு மாறுவதால் ஏற்படும் ஹார்மோன் மாற்றம் முடி உதிர்வதற்கு முக்கிய காரணமாகும்.
மன அழுத்தம் மற்றும் பதட்டத்திற்கு அதிகம் உள்ளாகும் நபர்களுக்கு முடி உதிர்வு, வழுக்கை வருவதாக கூறப்படுகிறது.
முடி பராமரிப்பிற்கான சரியான ஊட்டச்சத்துக்கள் இல்லாவிட்டால் முடி உதிர்வு அதிகரிக்கிறது.
Various Source
ஆண்ட்ரோஜெனடிக் ஆலோபீசியா போன்ற மரபணு பிரச்சினைகள் முடி உதிர்தலை ஏற்படுத்துகிறது.
Various Source
வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளித்தல், எண்ணெய் தடவுதல் போன்ற முடி பராமரிப்பு பணிகளை செய்யாமல் இருப்பது முடி உதிர்வுக்கு வழிவகுக்கும்.
மருந்துகளை சிறு வயதில் இருந்தே அதிகம் எடுத்துக் கொள்வதும் முடி உதிர்வுக்கு மறைமுக காரணமாக அமைகிறது.
முடி உதிர்வு, வழுக்கையை தவிர்க்க விரும்புபவர்கள் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வதுடன், மன அமைதியையும் காக்க வேண்டும்.
முடி உதிர்தல், வழுக்கை தொடர்பான சந்தேகங்கள், விளக்கங்களுக்கு மருத்துவ நிபுணரை அணுக வேண்டும்.