இலவங்கப்பட்டை பெண்களுக்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும்?
இலவங்கப்பட்டை இது சமையலில் சுவையூட்டப் பயன்படுகிறது. இது மருந்தாகவும், தோல் அழகுக்காகவும் பயன்படுகிறது. பல நோய்களை குணப்படுத்தும் இலவங்கப்பட்டையின் பயன்களை தெரிந்து கொள்வோம்.
Various Source
இலவங்கப்பட்டையின் மருத்துவ குணங்களும் தேனின் மருத்துவ குணங்களும் இணைந்து பாலுணர்வை உண்டாக்கும்.
பெண்களுக்கு ஏற்படும் இதய நோயைத் தடுப்பதிலும், தசை வீக்கத்தைக் குறைப்பதிலும் இலவங்கப்பட்டை நன்மை பயக்கும்.
ஒரு கிராம் இலவங்கப்பட்டையை பொடி செய்து தேவையான அளவு தேனுடன் காலை மாலை சாப்பிட்டு வந்தால் சளி, இருமல் குறையும்.
ஒரு பங்கு இலவங்கப்பட்டை பொடியில் 3 பங்கு தேன் கலந்து, இரவில் தடவி, காலையில் வெதுவெதுப்பான நீரில் கழுவ முகப்பரு பிரச்சனை குறையும்.
Various Source
சந்தனத்தை இலவங்கப்பட்டை மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தடவினால் கரும்புள்ளிகள் குறையும்.
Various Source
இலவங்கப்பட்டை, இஞ்சி, ஏலக்காய், சைந்தவ உப்பு ஆகியவற்றை சம அளவு பொடி செய்து கலந்து, தினமும் உணவுக்கு பின் அரை டம்ளர் வெதுவெதுப்பான நீரில் குடித்துவர அஜீரணம் மற்றும் வாயுத்தொல்லை குறையும்.
இலவங்கப்பட்டை, மஞ்சள், கறிவேப்பிலை மூன்றையும் சமமாக கலந்து காலை, மாலை அரை டீஸ்பூன் பொடியை கால் டம்ளர் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.
ஆரோக்கிய நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும் தகவலுக்கு மருத்துவ நிபுணரை அணுகவும்.