சருமத்தை பளபளப்பாக்க இயற்கையான எளிய வழிகள்..!

நம்மை அழகாக காட்டிக் கொள்ளவும், ஆரோக்கியத்திற்கும் சரும பாதுகாப்பு முக்கியமானது. இயற்கையான பொருட்களை கொண்டே பளபளப்பான சருமத்தை பெற முடியும்.

Various Source

கேரட்டை அரைத்து பாலில் கலந்து உடலில் தேய்த்து 10 நிமிடங்கள் கழித்து குளித்து வர சருமம் பளபளப்பாகும்.

கேரட், ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையை சமமான அளவு சாறு பிழிந்து தயிர், பன்னீர் கலந்து முகத்தில் பூசி ஊற வைத்து கழுவி வந்தால் முகம் பளபளப்பாகும்.

முகப்பரு உள்ள இடத்தில் எலுமிச்சையை நறுக்கி வைத்து சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் பருக்கள் குறையும்.

புதினாவை அரைத்து தேன், எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி வந்தால் கரும்புள்ளிகள் மறையும்.

Various Source

கடற்சங்கை பால்விட்டு அரைத்து பருக்கள் மேல் பூசி வந்தால் பருக்கள் குறைந்து முகம் பளபளப்பாகும்.

பப்பாளி பழத்தை நன்கு பிசைந்து உடலில் தடவி 30 நிமிடங்கள் கழித்து குளித்து வர மேனி பளபளப்பாகும்.

எலுமிச்சை சாறு பிழிந்த நீரில் ஆவி பிடித்து வந்தால் முக மாசுக்கள் அகன்று முகம் ஜொலிக்கும்.

Various Source

அடிக்கடி இஞ்சி ஜூஸ் குடித்தால் என்ன செய்யும் தெரியுமா..?

Follow Us on :-