ஆரோக்கியமான ஆரஞ்சு மிளகு ரசம் செய்வது எப்படி?

தமிழர் உணவு முறையில் ரசத்திற்கு முக்கியமான இடம் உண்டு. பல ரச வகைகள் உள்ள நிலையில் பழங்களை கொண்டு செய்யப்படும் ரசத்தில் ஆரஞ்சு மிளகு ரசம் சுவையும், ஆரோக்கியமும் கொண்டதாகும். ஆரஞ்சு மிளகு ரசம் செய்வது எப்படி என பார்க்கலாம்.

Various Source

தேவையானவை: பழுத்த ஆரஞ்சு பழம், சீரகம், கடுகு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், எலுமிச்சை பழம், கொத்தமல்லி, நெய், உப்பு தேவையான அளவு

நன்கு பழுத்த 2 ஆரஞ்சு பழங்களை உறித்து விதைகளை அகற்றி ஜூஸாக தயார் செய்து கொள்ள வேண்டும்.

அரை தேக்கரண்டி மிளகு மற்றும் சீரகத்தை எடுத்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்.

இந்த மிளகு சீரக பொடியை 4 டம்ளர் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

Various Source

அடுப்பில் கடாய் வைத்து 1 தேக்கரண்டி நெய் விட்டு கடுகு, பெருங்காயத்தை தாளித்துக் கொள்ளவும்.

Various Source

பின்னர் அதில் மிளகு சீரக கரைசல், நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

கொதிக்க வைத்து இறக்கிய பிறகு அதில் ஆரஞ்சு பழ சாறை கலக்க வேண்டும்.

பின்னர் அதில் எலுமிச்சை பழத்தை பிழிந்து கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்தால் ஆரஞ்சு மிளகு ரசம் தயார்.

விட்டமின் மாத்திரைகள் அதிகம் சாப்பிட்டால் ஆபத்தா?

Follow Us on :-