கோதுமைப்புல்லை பொடி செய்து சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
கோதுமைப் புல்லை அறைத்து சாறாக்கி செய்யப்படும் கோதுமைப்புல் பொடி பல்வேறு ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளதுடன், பல்வேறு உடல் சார்ந்த பிரச்சினைகளை தீர்க்கும் அருமருந்தாகவும் செயல்படுகிறது.
Various source
கோதுமைப்புல்லில் உடல் இயக்கத்திற்கு தேவையான 19 அமினோ அமிலங்களும், தாதுச்சத்துக்களும் உள்ளன.
கோதுமைப்புல் பொடியை தண்ணீர், பழச்சாறு உள்ளிட்டவற்றில் கலந்து அருந்தலாம்.
கோதுமைப்புல் பொடி சாறு அருந்துவதால் உணவு செரிமான சக்தி கூடுகிறது.
கோதுமைப்புல் பொடியில் உள்ள க்ளோரிஃபில்கள் ரத்தத்தில் ஹீமோகுளோபின்கள் அதிகரிக்க உதவுகிறது.
Various source
உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் கோதுமைப்புல் பொடியை தண்ணீரில் கலக்கி காலையில் குடித்து வரலாம்.
இதில் உள்ள நார்ச்சத்துகள், தாதுக்கள் மூல நோயை குணப்படுத்த வல்லதாக இருக்கின்றது.
இதில் கால்சியம் சத்து உள்ளதால் பற்சிதைவு, பல் சார்ந்த பிரச்சினைகளில் இருந்து காக்கிறது.