புரோக்கோலியின் ஆரோக்கிய நன்மைகள்!

பொட்டாசியம், கால்சியம், நார்ச்சத்துகள், கரோடினாய்டு, வைட்டமின் சி. இ, கே, போலேட், சல்போரபேன் ஆகியன புரோக்கோலியில் இருக்கின்றன.

Pixabay

புரோக்கோலி உணவைச் சாப்பிட்டால், கால்சியம் சத்து அதிகரிக்கும். ரத்த அழுத்தம் குறையும்.

புரோக்கோலியில் இருக்கும் குரோமியம் ரத்தத்தின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும், இன்சுலின் சுரக்கும் அளவையும் அதிகரிக்கும்.

இதில் உள்ள நார்ச்சத்து உடலின் செரிமான சக்திக்கு உதவும். இதைச் சாப்பிடுவது குடல் ஆரோக்கியம் மேம்படும் செரிமானம் சீராகும்.

மன அழுத்தத்தின் அறிகுறிகள் தென்பட்டால், சல்போரபேன் நிறைந்த இளசான புரோக்கோலியை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

புரோக்கோலியில் இருக்கும் சல்போரபேன் உடலிலுள்ள நச்சுத் தன்மைக்கு எதிராகச் செயல்படும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

Pixabay

புரோக்கோலி கர்ப்பிணிப் பெண்களுக்குத் தேவையான கால்சியத்தை அளிக்கக்கூடியது.

Pixabay

புரோக்கோலியை சமைத்து சாப்பிடுவதை விட அரை வேக்காடாக, சாலட் போலச் சாப்பிடுவது மிகுந்த பயனைத் தரும்.

Pixabay

ஆனால் இது சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தலாம். எனவே கவனம் தேவை.

Pixabay

சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய பழங்கள்!

Follow Us on :-