வெயில் காலத்தில் வெள்ளரிக்காய் சாப்பிடுவதில் இவ்வளவு நன்மைகளா?
உடலுக்கு தேவையான நீர்ச்சத்தையும், புத்துணர்ச்சியையும் வழங்குவது வெள்ளரிக்காய். கோடைக்காலத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளை போக்கும் ஆற்றம் வெள்ளரிக்காய்க்கு உள்ளது. அதன் பயன்களை காண்போம்..
Various Source
வெள்ளரியில் நீர்ச்சத்து, சோடியம், கால்சியம், இரும்புச்சத்து ஆகிய பல சத்துக்கள் அடங்கியுள்ளது.
வெள்ளரிக்காயில் உள்ள 95% நீர்ச்சத்து தாகத்தை தணித்து உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை அளிக்கிறது.
வெள்ளரிக்காய் கோடைக்கால உடல்சூட்டை தணிக்கும், சிறுநீர் உற்பத்தியை தூண்டும்.
கோடைக்காலத்தில் வெள்ளரி சாப்பிடுவதால் சூட்டால் ஏற்படும் கண் எரிச்சல், நீர்க்கடுப்பு குணமாகும்.
வாய்ப்புண் உள்ளவர்கள் வெள்ளரிக்காயை சாறாக்கி அருந்தி வர வாய்ப்புண் சரியாகும்.
Various Source
வெள்ளரிக்காய் சாறு தொடர்ந்து குடித்து வர வறண்ட தோல், உதடுகளுக்கு ஈரப்பதம் கிடைக்கும்.
Various Source
மலச்சிக்கல் உள்ளவர்கள் வெள்ளரிக்காயை கடித்து மென்று சாப்பிட்டு வர மலச்சிக்கல் சரியாகும்.