ஆரோக்கியத்தை அள்ளி தரும் அருகம்புல் சாறு..!

இயற்கை தந்த மகத்துவமான மூலிகைகளில் ஒன்று அருகம்புல். அருகம்புல்லை சாறு பிழிந்து தினசரி வெறும் வயிற்றில் குடித்தால் பல ஆரோக்கிய நன்மைகளை அள்ளி வழங்கும்.

Various Source

அருகம்புல்லை தண்ணீர் விட்டு அரைத்து சாறு பிழிந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் பல நன்மைகள் கிட்டும்.

அருகம்புல் சாறு குடித்து வர உடலில் உள்ள ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது. ரத்த சோகை, ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது.

ஞாபக மறதி, மன உளைச்சலை போக்கி ஞாபக சக்தியை தூண்ட அருகம்புல் ஜூஸ் அருமருந்தாகும்.

அருகம்புல்லில் உள்ள விட்டமின் ஏ சத்து நாள்முழுவதும் புத்துணர்ச்சியோடு இருக்க உதவுகிறது.

Various Source

அருகம்புல் சாறை வெறும் வயிற்றில் குடிப்பதால் வயிற்றில் ஏற்படும் புண்களை குணமாக்கி அல்சரிலிருந்து காக்கும்.

Various Source

உடல் எடை குறைக்க விரும்புவோர் தினசரி அருகம்புல் சாறு குடித்து வந்தால் ஊளை சதை குறையும்.

Various Source

நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்து அருகம்புல் சாறு அவசியமானது.

உடல் சூட்டை குறைக்கும் அற்புதமான கிராம வைத்தியம்..!

Follow Us on :-