மூங்கில் மரத்தின் பூப்பகுதியில் இருந்து சேகரிக்கப்படும் மூங்கில் அரிசி மிக அரிதாக பயன்படுத்தப்படுவதும், அதிகமான மருத்துவ குணங்களை கொண்டதும் ஆகும். அதன் பயன்களை காண்போம்..
Various Source
மூங்கில் அரிசியில் கலோரிகள், புரதச்சத்து, மெக்னீசியம், காப்பர், ரிபோப்ளாவின் போன்ற உடலுக்கு தேவையான சத்துக்கள் உள்ளன.
சர்க்கரை நோயால் உடல் மெலிந்தவர்கள் மீண்டும் நல்ல உடல் அமைப்பை பெற மூங்கில் அரிசி நல்ல உணவு.
மூங்கில் அரிசியை தினை, சாலாமிரிசியுடன் அரைத்து கஞ்சி செய்து சாப்பிட்டு வர சர்க்கரை நோய் கட்டுப்படும்.
மூங்கில் அரிசியை கஞ்சியாக செய்து குடித்து வர மூட்டு வலி, கழுத்து வலி உள்ளிட்ட உடல் வலிகள் குணமாகும்.
Various Source
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாட்டை மூங்கில் அரிசி போக்குகிறது.
கெட்ட கொழுப்புகளை குறைக்கும் திறன் மூங்கில் அரிசிக்கு உள்ளது. உடல் எடையை குறைக்கிறது.
மூங்கில் அரிசி கஞ்சி சாப்பிட்டு வந்தால் பசி குறைவதுடன், உடல் ஆற்றலும் பெருகும்.