பழங்கள் சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?

உடல் எடையைக் குறைக்க வேண்டுமென்று நினைப்பவர்கள் தங்களது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய மற்றும் கூடாத பழ வகைகளின் விவரம்.

Social Media

ஆப்பிள் - கலோரி அளவுகளில் மிகக் குறைவு. நார்ச்சத்துக்கள் மிக மிக அதிகம். உணவில் சேர்க்கலாம்.

பெர்ரி வகை பழங்கள் - குறைந்த கலோரிகளும் அதிக ஊட்டச்சத்துக்களும் நிறைந்த பவர்ஹவுஸ் இவை. உணவில் சேர்க்கலாம்.

கிவி - வைட்டமின் சி, வைட்டமின் கே, நார்ச்சத்துக்கள், ஃபோலேட் சத்து ஆகியவை நிறைந்திருக்கின்றன. உணவில் சேர்க்கலாம்.

மெலன் வகை பழங்கள் - வாட்டர்மெலன், மஸ்க்மெலனில் கலோரி அளவு மிகக் குறைவு. தண்ணீர்ச்சத்து மிக அதிகம். உணவில் சேர்க்கலாம்.

Social Media

ஆரஞ்சு - வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துக்கள் அதிக அளவில் இருப்பதால் சாப்பிட்டதும் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வோடு வைத்திருக்கும். உணவில் சேர்க்கலாம்.

Social Media

மாதுளம் பழம் - சர்க்கரை அதிகமாக இருப்பதால் ரத்தத்தின் சர்க்கரை அளவை உடனடியான உயர்த்தக்கூடும். எடையையும் அதிகரிக்கும்.

Social Media

திராட்சை - சர்க்கரை அளவு சற்று கூடுதலாக இருப்பதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தவிர்ப்பது நல்லது.

Social Media

வாழைப்பழம், மாம்பழம் - எடையைக் குறைக்க டயட்டில் இருப்பவர்கள் பலரும் கலோரிகளை கணக்கில் கொண்டு இதனை தவிர்த்து விடுவார்கள்.

Social Media

நல்ல மொறு மொறு தோசைக்கு என்ன செய்யனும்?

Follow Us on :-