எந்தெந்த உணவுகளில் இரும்புச் சத்து இருக்கிறது??

உடல் மற்றும் ரத்தத்தின் சீரான செயலிற்கு இரும்புச் சத்து மிக மிக முக்கியம். அந்தவகையில், எந்தெந்த உணவுகளில், இரும்புச் சத்து இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வோமா..?

Webdunia

பேரீச்சம்பழம்

அதிக அளவில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. 100 கிராம் பேரீச்சம்பழத்தில் ஒரு நாளுக்கு தேவையான இரும்புச்சத்தில் 50% உள்ளது.

மாதுளை

மாதுளை இரும்புச் சத்து நிறைந்த, சிறந்த பழமாகும். 100 கிராம் மாதுளையில் 0.3 மில்லிகிராம் இரும்புச் சத்து நிறைந்துள்ளது.

அத்திப்பழம்

தினமும் ஒரு அத்திப்பழம் சாப்பிட்டு வருபவர்களுக்கு ரத்தசோகை, மலச்சிக்கல் மற்றும் அசதி போன்ற பிரச்சினை இருக்கவே இருக்காது.

கொய்யாப்பழம்

கொய்யாப்பழத்தில் இரும்புச் சத்து, நார்ச்சத்து, வைட்டமின் சி, புரோட்டீன், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

உலர்திராட்சை

அதிக அளவில் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. தினமும் ஒரு கைப்பிடி அளவு இதனை உட்கொண்டு வாருங்கள்.

ஆப்ரிகாட்

100 கிராம் அப்ரிகாட் பழத்தில் கிட்டத்தட்ட 2.5 மில்லிகிராம் அளவுக்கு இரும்புச் சத்து நிறைந்துள்ளது.

மாம்பழம்

இதில் இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம், மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது.

தர்பூசணி

ஒரு தர்பூசணி பழத்தில் 12 மில்லிகிராம் அளவிற்கு இரும்புச் சத்து இருக்கின்றது.

யாரெல்லாம் நெய் சாப்பிடவே கூடாது??

Follow Us on :-