வயிற்றில் பசியை தூண்ட வைக்க நாட்டு மருத்துவ குறிப்புகள்!
பசி இல்லாமை என்பது அஜீரண கோளாறு, வயிற்றில் உள்ள நாக்கு பூச்சிகள் உள்ளிட்ட பல காரணங்களால் ஏற்படுகிறது. அவற்றை போக்கி பசியை தூண்ட சிறந்த நாட்டு மருத்துவ குறிப்புகளை காண்போம்.
Various Source
மிளகு தூள் மற்றும் இஞ்சி வடகம் பசியை தூண்டும் நல்ல மருந்தாகும்.
வயிற்றில் உள்ள நாக்கு பூச்சிகளை ஒழித்து பசியின்மையை போக்க உணவில் சுண்டைக்காயை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பாகற்காயின் கசப்பு தன்மை வயிற்றில் உள்ள புழு, பூச்சிகளை வெளியேற்றி குடலை சுத்தப்படுத்தும்.
ஓமம், சுக்கு, தனியாவை பொடியாக்கி அரிசி கஞ்சியுடன் கலந்து பருகி வர உணவு செரிமானம் மேம்படும்.
Various Source
செரிமான பிரச்சினை குணமாக 15 கிராம் வெட்டி வேரை 1 லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து அவ்வப்போது கொஞ்சம் குடித்து வரலாம்.
Various Source
மரிக்கொழுந்து இலை மென்று சாப்பிட்டு வர நன்றாக பசியை தூண்டும்.
மணத்தக்காளி கீரையை உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப்புண், பசியின்மை குணமாகும்.