வீட்டிலேயே முட்டை கலக்கி செய்வது எப்படி?
ரோட்டு கடை ஸ்டைலில் வீட்டிலேயே முட்டை கலக்கி செய்வது எப்படி என தெரிந்துக்கொள்ளுங்கள்...
Social Media
தேவையான பொருட்கள்: முட்டை - 2, மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, மிளகத்தூள் – அரை ஸ்பூன், எண்ணெய் - 2 ஸ்பூன்
செய்முறை: ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் உப்பு, மிளகு தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்றாக அடித்து எடுத்துக்கொள்ளுங்கள்.
பின்னர் தவாவில் எண்ணெய் ஊற்றி, அடித்த முட்டை கலவையை ஊற்ற வேண்டும்.
ஊற்றியவுடன் கரண்டியால் முட்டையின் ஓரத்தை உள்புறமாக மூட வேண்டும்.
முட்டை கலவை திரண்டவுடன் அதை தவாவிலிருந்து உடனடியாக தட்டிற்கு மாற்றவேண்டும்.
Social Media
இப்போது முட்டை கலக்கி தயார். இதில் விருப்பப்பட்டால் வெங்காயம் சேர்த்துக்கொள்ளலாம்.
Social Media
இதனுடன் மட்டன் அல்லது சிக்கன் குழம்பு கலந்து ஊற்றலாம்.
Social Media
lifestyle
கருப்பு மிளகு இத்தனை கோளாறுகளை நீக்குமா?
Follow Us on :-
கருப்பு மிளகு இத்தனை கோளாறுகளை நீக்குமா?