கருகி அடிப்பிடித்த பாத்திரத்தை பளபளவென மாற்றுவது எப்படி?

வீட்டில் பயன்படுத்தும் பாத்திரங்களில் பால் தீய்ந்து போனாலோ, குழம்பு அடிபிடித்தாலோ நீக்க முடியாத கருப்பு கறை உண்டாகிவிடும். இப்படியான கரைகளை எளிதாக நீக்கி பாத்திரத்தை பளபளப்பாக்குவது எப்படி என பார்ப்போம்.

Various Source

பாத்திரத்தின் அடிபிடித்த பகுதி மூழ்கும் அளவு தண்ணீரை ஊற்றி பாத்திரத்தை அடுப்பில் வைக்க வேண்டும்.

அடுத்த அந்த தண்ணீரில் அரை ஸ்பூன் பேக்கிங் சோடா, இரண்டு ஸ்பூன் வினிகர் அல்லது எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும்.

தண்ணீர் சூடாகி வந்ததும் பாத்திரம் கழுவும் லிக்விடை அதில் சேர்த்து அடிபிடித்த பகுதியை கரண்டியை வைத்து மெதுவாக சுரண்ட வேண்டும்.

பாத்திரம் சூடாகி தண்ணீர் கொதி வந்ததும் கரண்டியை வைத்து சுரண்டும்போது கறைகள் மெல்ல நீங்க தொடங்கும்.

Various Source

அடிப்பிடித்த கறைகள் நன்றாக நீங்கியதும் அடுப்பை அணைத்து விட்டு பாத்திரத்தில் உள்ள நீரை கொட்டி விட வேண்டும்.

இப்போது பாத்திரத்தில் உள்ள சிறிய கறைகளை ஸ்க்ரப்பர் வைத்து லேசாக தேய்த்து கழுவினால் நீங்கும்.

பின்னர் பாத்திரத்தை நன்றாக தண்ணீர் ஊற்றி கழுவிய பின் கருகிய கறைகளே இல்லாமல் பாத்திரம் பளிச்சென்று இருக்கும்.

சுவையா சாப்பிடலாம் சூப்பரான வெஜிடபிள் பனீர் கட்லெட்!

Follow Us on :-