வெங்காயம் சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு குறையுமா?
அன்றாட சமையலில் சுவைக்காக பயன்படுத்தப்படும் வெங்காயம், ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டது. வெங்காயம் உடலில் ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுவதாக கூறப்படுகிறது. வெங்காயத்தின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து காண்போம்.
Various source
வெங்காயத்தில் விட்டமின் சி, பி6, போலேட், பொட்டாசியம், சல்பர் போன்றவை அதிகமாக உள்ளது.
வெங்காயத்தில் உள்ள ஆந்தோசயனின் மற்றும் கோர்சிட்டின் செல் அழற்சியை குறைத்து நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.
மேலும் இருதயநோய், கொலஸ்ட்ரால் அதிகரிப்பு போன்றவற்றையும் வெங்காயம் தடுக்க உதவுகிறது.
வெங்காயத்தில் உள்ள கோர்சிட்டின் உடலில் உள்ள செல்களுடன் ஒருங்கிணைந்து சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.
Various source
வெங்காயத்தில் உள்ள சல்பர் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
இதில் உள்ள விட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
வெங்காயத்தில் உள்ள அனயானின் ஏ என்ற சல்பர் புற்றுநோய் வராமல் தடுப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பு: இது ஆரோக்கிய தகவலாக வழங்கப்படுகிறது. மேலதிக தகவல்களுக்கு மருத்துவ நிபுணரை அணுகவும்.