Safetyஆ தீபாவளி கொண்டாட சில டிப்ஸ்!
தீபாவளி அன்று பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க சில வழிமுறைகள்
Pixabay, Pexel
நாடு முழுவதும் அக்டோபர் 24ம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பாதுகாப்பாக தீபாவளி கொண்டாட சில டிப்ஸ்..
குறைந்த ஒலி கொண்ட பட்டாசுகள் மற்றும் குறைவான காற்று மாசை ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகளை வெடிக்கலாம்.
மருத்துவமனை, கோவில் மற்றும் அமைதி தேவையான பகுதிகளில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்கலாம்.
எளிதில் தீ பற்றக்கூடிய அளவில் உள்ள கூரை வீடுகள், குடிசை பகுதிகளில் சற்று தூரம் தள்ளி சென்று பட்டாசு வெடிக்கலாம்.
அரசு அறிவுறுத்தலின்படி, அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் மொத்தம் 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்கலாம்.
Pixabay, Pexel
சிறார்கள் பட்டாசு வெடிக்க நீண்ட ஊதுபத்திகள் போன்றவற்றை பயன்படுத்தலாம். பெரிய வெடிகளை வெடிக்காமல் மத்தாப்பூ, சங்கு சக்கரம் போன்றவற்றை பயன்படுத்தலாம்.
Pixabay, Pexel
சிறுவர்கள் பட்டாசு வெடித்தப்பின் கைகளை சோப்பு அல்லது ஹேண்ட்வாஷ் வைத்து நன்றாக கழுவ வேண்டும். அதன்பின்னரே பலகாரங்களை சாப்பிட வேண்டும்.
Pixabay, Pexel
ராக்கெட் போன்றவற்றை கைகளால் வீசுவது, மணலில் குத்தி பற்ற வைப்பதை தவிர்த்து காலி பாட்டிலில் வைத்து திறந்த வெளியில் வெடிக்கலாம்.
Pixabay, Pexel
வெடிகளை கையில் வைத்து கொளுத்தி போடுவது போன்ற அபாயமான சாகச செயல்களை தவிர்த்து தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடலாம்.
Pixabay, Pexel
lifestyle
குறைந்த விலையில் ஜியோ லேப்டாப்..! தீபாவளிக்கு அறிமுகம்!
Follow Us on :-
குறைந்த விலையில் ஜியோ லேப்டாப்..! தீபாவளிக்கு அறிமுகம்!