தித்திக்கும் திரட்டுப் பால் வீட்டிலேயே ஈஸியா செய்யலாம்!

பாலில் செய்யப்படும் சுவையான பதார்த்தங்களில் திரட்டு பால் சிறப்பான ஒன்று. சுவையான சூப்பரான திரட்டுப் பாலை வீட்டிலேயே செய்வது எப்படி என பார்ப்போம்.

Various source

தேவையான பொருட்கள்: ஒரு லிட்டர் பால், வெல்லம் அல்லது சர்க்கரை – 300 கிராம், நெய், முந்திரி, ஏலக்காய் பொடி,

அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விடவும்.

பாலை தொடர்ந்து கிளறி விட்டுக்கொண்டே இருக்க, பால் கெட்டியாகி ஏடுகளாக வரும்.

பால் ஏடு ஏடாக திக்காக வரும்போது அதனுடன் சர்க்கரை அல்லது வெல்லத்தை சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

பால், வெல்லம் சேர்த்து பால் திரண்டு மேலும் கெட்டியாகும்போது நெய், ஏலக்காய் பொடி சேர்த்து கிளற வேண்டும்.

பாத்திரத்தில் ஒட்டாத வண்ணம் பால்கோவா போல திரண்டு வரும்போது நெய்யில் வறுத்த முந்திரி தூவி இறக்கவும்.

சற்று ஆறியதும் கிண்ணத்தில் எடுத்து பறிமாரினால் சுவையான திரட்டு பால் தயார்.

ஆந்திரா ஸ்டைல் இட்லி பொடி வீட்டிலேயே செய்யலாம்!

Follow Us on :-