சத்தான தினை அதிரசம் செய்யலாம் வாங்க!

கிராமங்களில் செய்யப்படும் சுவையான திண்பண்டங்களில் அதிரசம் முக்கியமானது. பொதுவாக பச்சரியில்தான் அதிரசம் செய்வார்கள். ஆனால் சத்தான தினை அரிசியை கொண்டு சுவையான அதிரசம் செய்யலாம்.

Various Source

தேவையான பொருட்கள்: தினை – 2 கப், வெல்லம் – 2 கப், ஏலக்காய் – 3, உப்பு தேவையான அளவு

தினையை நன்றாக கழுவி ஊற வைத்து உலர்த்திய பின் மைப்போல அரைத்துக் கொள்ள வேண்டும்.

வெல்லத்தை பாத்திரத்தில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்ச வேண்டும்.

பின்னர் தினை மாவுடன், ஏலக்காய் பொடி சேர்த்து வெல்லப்பாகை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கட்டிவிழாமல் நன்றாக கிளறி விட வேண்டும்.

Various Source

பின்னர் மாவை மூடி வைத்து அடுத்த நாள் அல்லது இரண்டு நாட்கள் கழித்து எடுத்து அதிரசம் சுடலாம்

கடாயில் எண்ணெய் விட்டு அதிரச மாவை உள்ளங்கை அளவு எடுத்து மீடியமாக தேய்த்து நடுவே துளையிட்டு போட்டு சிவக்க பொறித்து எடுத்தால் சுவையான தினை அதிரசம் தயார்.

காலையில் கிராம்பு தேநீர் குடிப்பதன் அற்புத பலன்கள்!

Follow Us on :-