சுவையான சேமியா கேசரி எளிதாக செய்யலாம்!

வீட்டில் செய்யப்படும் இனிப்பு பதார்த்தங்களில் அடிக்கடி செய்யப்படுவது கேசரி. ரவை, சேமியா கொண்டு விதவிதமாக கேசரி செய்யலாம். சேமியா கேசரி வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி என பார்ப்போம்.

Various Source

தேவையான பொருட்கள்: சேமியா – 1 கப், கேசரி பவுடர், நெய், சர்க்கரை, ஏலக்காய் பொடி, நெய்

வாணலியில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு சேமியாவை கடாயில் போட்டு ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து லைட்டாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியில் 2 கப் தண்ணீர் ஊற்றி அதில் வறுத்த சேமியாவை சேர்த்து வேக வைக்க வேண்டும்.

பின்னர் அதனுடன் சர்க்கரை சேர்த்து அது நன்றாக கரைந்து சேமியாவுடன் சேர்ந்த பின் ஏலக்காய் பொடி, கேசரி பவுடர் சேர்க்கவும்.

Various Source

சேமியா நன்றாக வெந்து வந்ததும் வறுத்து வைத்த முந்திரி, திராட்சையை சேர்த்து கிளறி எடுத்தால் சுவையான சேமியா கேசரி தயார்.

பச்சை ஆப்பிள், சிவப்பு ஆப்பிள் எதை சாப்பிடலாம்?

Follow Us on :-