தித்திக்கும் சூப்பரான ஜவ்வரிசி லட்டு ரெசிபி!

லட்டு கடலைமாவில் மட்டுமல்லாமல் பல்வேறு தானியங்களிலும் செய்யப்படுகிறது. அப்படியாக செய்யப்படும் ஜவ்வரிசி லட்டு வித்தியாசமான சுவையை கொண்டதாகும். சுவையான ஜவ்வரிசி லட்டு செய்வது எப்படி என பார்ப்போம்.

Various Source

தேவையான பொருட்கள்: ஜவ்வரிசி, சர்க்கரை, மஞ்சள் தூள் (தேவைப்பட்டால்), ஏலக்காய் பொடி, குங்குமப்பூ, நெய் முந்திரி,

ஜவ்வரிசியை இரவு முழுவதும் தண்ணீர் ஊற்றி நன்றாக ஊற வைக்க வேண்டும்.

கடாயில் நெய் ஊற்றி, ஊற வைத்த ஜவ்வரிசி, சர்க்கரை சேர்த்து கட்டிப்படாமல் கிளற வேண்டும்.

அதனுடன் ஏலக்காய் பொடி, குங்குமப்பூ போன்றவற்றை சேர்த்து கிளற வேண்டும்.

Various Source

லட்டு மஞ்சள் நிறத்தில் வர வேண்டும் என்றால் மஞ்சள் தூள் சேர்க்கலாம்.

நெய் ஊற்றி நன்றாக கிளறி, பின்னர் வறுத்த முந்திரிகளை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

வெதுவெதுப்பாக இருக்கும்போதே ஜவ்வரிசி கலவையை சிறிய உருண்டைகளாக உருட்டி ஆற வைக்க வேண்டும்.

இப்போது சுவையான ஜவ்வரிசி லட்டு தயார். லட்டின் மேலே ஒரு பாதம் பருப்பை வைத்து அலங்காரம் செய்தால் பார்க்க அழகாக இருக்கும்.

தீபாவளி ஸ்பெஷல் நெய் மைசூர் பாகு ரெசிபி!

Follow Us on :-