வெயில் காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள நல்ல உணவு வகைகளில் மோர் குழம்பும் ஒன்று. காரம் அதிகமற்ற சுவையான சூப்பரான ஐயங்கார் வீட்டு மோர் குழம்பு செய்வது எப்படி என பார்ப்போம்!
Various source
தேவையான பொருட்கள்: தயிர், வெள்ளை பூசணி, தேங்காய் எண்ணெய், மஞ்சள் தூள், கடுகு, வர மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை
அரைக்க தேவையான பொருட்கள்: துவரம் பருப்பு, பச்சரிசி, சீரகம், தனியா, தேங்காய் துருவல், பச்சை மிளகாய், இஞ்சி ஒரு துண்டு..
முதலில் ஒரு டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு, பச்சரிசியை நன்றாக ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஊற வைத்த அரசி, பருப்புடன், இஞ்சி, பச்சை மிளகாய், தேங்காய் துருவல், தனியா மற்றும் சீரகம் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
Various source
ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க வைத்து நறுக்கிய வெள்ளை பூசணியை சேர்த்து வேக வைக்க வேண்டும்.
பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்த்து குறைந்த தீயில் கொதிக்க விட வேண்டும்.
பிறகு தயிரை அடித்து மோர் தயாரித்து அதை கடாயில் சேர்த்து அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
தேங்காய் எண்ணெய்யில் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து மோர் குழம்பில் சேர்த்தால் சுவையான ஐயங்கார் வீட்டு மோர் குழம்பு தயார்.