உடலை குளிர்ச்சியாக்கும் பால் கேரட் ஜூஸ் செய்யலாம் வாங்க!

வெயில் காலத்தில் உடலில் நீர்சக்தியை பாதுகாப்பது மிகவும் அவசியம். கோடைக்கால நீர்ச்சத்து இழப்பை தவிர்ப்பதில் கேரட் முக்கிய பங்கு வகிக்கிறது. நீர்ச்சத்து அளிக்கும் சுவையான பால் கேரட் ஜூஸ் செய்வது எப்படி என பார்ப்போம்.

Various Source

தேவையான பொருட்கள்: கேரட், பாதாம், ஏலக்காய் தூள், கல்கண்டு, பால்

கேரட்டை தோல் சீவிக் கழுவி மீடியம் சைஸ் துண்டுகளாக வெட்டி வேக வைத்துக் கொள்ள வேண்டும்.

பாதாம் பருப்பை வெந்நீரில் ஊற வைத்து தோல் நீக்கி, வேக வைத்த கேரட்டுடன் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அரை லிட்டர் பாலை காய்ச்சி ஆற வைத்துக் கொள்ள வேண்டும்.

Various Source

அரைத்த கேரட், பாதாம் விழுதுடன் கல்கண்டு சேர்த்து பாலை ஊற்றி மெல்ல கலக்க வேண்டும்.

பிறகு ஏலக்காய் தூள் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்தால் குளுகுளு சூப்பர் சுவை பால் கேரட் ஜூஸ் தயார்.

விட்டமின் ஏ சத்து நிறைந்த இந்த பால் கேரட் ஜூஸை குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பானமாகவும் கொடுக்கலாம்.

கோடையை குளிர்விக்கும் சூப்பர் ரோஸ்மில்க் ஈஸியா செய்யலாம்..!

Follow Us on :-