தித்திக்கும் சுவையான மாங்காய் பச்சடி ஈஸியா செய்வது எப்படி?
கோடைக்காலம் வந்தாலே மாங்காய் சீசன்தான். சீசனில் கிடைக்கும் மாங்காயில் ஊர்களில் பல்வேறு விதமான பட்சணங்களை செய்வார்கள். அவற்றில் தித்திப்பான ருசியான ஒன்றுதான் மாங்காய் பச்சடி. சுவையான மாங்காய் பச்சடி செய்வது எப்படி என பார்ப்போம்.
Various Source
தேவையான பொருட்கள்: பெரிய மாங்காய், மிளகாய் தூள், பச்சை மிளகாய், வரமிளகாய், கடுகு, வெல்லம், உப்பு, பெருங்காயம்
மாங்காயை கழுவி மேல்தோலை நீக்கிவிட்டு மாங்காயை நைஸாக சீவிக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி வெல்லம் போட்டு கரையும் வரை சூடுபடுத்தி வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, வரமிளகாய், நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு வதக்க வேண்டும்.
பின்னர் அதனுடன் பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வெட்டிய மாங்காய் துண்டுகளை சேர்க்கவும்
அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் கால் டீஸ்பூன் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கி வெல்ல தண்ணீர் சேர்க்கவும்.
மாங்காய், வெல்ல தண்ணீர் கலந்து கெட்டியானதும் இறக்கினால் சுவையான மாங்காய் பச்சடி தயார்.