உடலுக்கு பல சத்துக்களை வழங்குவதில் கேழ்வரகு உள்ளிட்ட தானியங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும் கேழ்வரகு கொண்டு லட்டு, முறுக்கு, தோசை என பல வகை உணவுகளை செய்யலாம். கேழ்வரகு முறுக்கு எப்படி செய்வது என பார்ப்போம்.
Various source
தேவையான பொருட்கள்: கேழ்வரகு மாவு – 3 கப், அரிசி மாவு – 1 கப், வறுத்த பருப்பு, எள் – 1 டேபிள் ஸ்பூன், வெண்ணெய், மிளகாய்த்தூள், உப்பு தேவையான அளவு
கேழ்வரகை மாவை கடாயில் போட்டு அதன் பச்சை வாசனை போகும் வரை லேசாக வறுக்க வேண்டும்.
பிறகு அதனுடன் அரிசி மாவு, வறுத்த பருப்பு, வெண்ணெய், எள் மிளகாய் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து முறுக்கு மாவு பதம் வரும் வரை பிசைய வேண்டும்.
முறுக்கு அச்சில் மாவை வைத்து பிழிந்து எடுத்துக் கொள்ளவும். எந்த வடிவில் முறுக்கு வேண்டுமோ அந்த அச்சை பயன்படுத்தலாம்.
கடாயில் எண்ணெய் விட்டு நன்றாக கொதித்து வந்ததும் பிழிந்த முறுக்கு மாவை போட்டு பொறித்து எடுக்க வேண்டும்.