சமையலில் அசத்த இதோ சில டிப்ஸ்!!

ரவை தோசை மொறுகலாக வர ரவையுடன் ஒரு பங்கு கோதுமை மாவு, 2 பங்கு அரிசி மாவு சேர்த்து மாவு தயாரிக்கலாம்.

Social Media

சப்பாத்திக்கு மாவு பிசையும் போது அதனுடன் இளநீர் ஊற்றி பிசைந்தால் சப்பாத்தி சாஃப்ட்டாக இருக்கும்.

கீரையை சமைத்து இறக்கிய பின்னர் உப்பு சேர்த்தால், கீரையில் உண்டாகும் ரசாயன மாற்றங்களை தவிர்க்கலாம்.

பூரி மாவு பிசையும் போது சிறிது சர்க்கரை சேர்த்தால் பூரி பொன்னிறமாகவும் நமத்து போகாமலும் இருக்கும்.

அடைக்கு மாவு அரைக்கும் போது அதனுடன் சிறிதி ஜவ்வரிசியி சேர்த்து அரைத்தால் அடை மொறுமொறுப்பாக வரும்.

மாவு வேகமாக புளிக்க சில காய்ந்த மிளகாய் காம்புகளை மாவில் போட்டு வைக்கலாம்.

Social Media

ஆப்பத்திற்கு மாவு அரைக்கும் போது தேங்காய் தண்ணீர் சேர்த்து அரைத்தால் ஆப்பம் மென்மையாக வரும்.

Social Media

முட்டையை பயன்படுத்தி எந்த உணவு செய்தாலும் அதனுடன் அவசியம் மஞ்சள் மற்றும் மிளகு சேர்ப்பது நல்லது.

Social Media

இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அரைக்கும் போது இஞ்சியை விட பூண்டு இரண்டு மடங்கு அதிகமாக இருக்க வேண்டும்.

Social Media

வெறும் வயிற்றில் பிளாக் டீ அல்லது காபி குடித்தால் என்ன ஆகும்?

Follow Us on :-