செட்டிநாடு ஃபேமஸ் வெங்காய கோஸ் செய்வது எப்படி?

செட்டிநாடு வகை உணவுகள் தமிழகம் முழுவதும் பலருக்கு விருப்பமான உணவு. அப்படியான செட்டிநாடு ரெசிபிகளில் ஒன்றுதான் சுவையான வெங்காய கோஸ். இதை எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க!

Various source

தேவையான பொருட்கள்: வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, நல்லெண்ணெய், சொம்பு, மஞ்சள் தூள், உப்பு, காய்ந்த மிளகாய், தேங்காய், கொத்தமல்லி,

ஒரு கடாயை வைத்து காய்ந்த மிளகாய், சோம்பு ஆகியவற்றை வறுத்துக் கொள்ள வேண்டும்.

அதனுடன் தேங்காய் துறுவல் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், தக்காளி, சோம்பு போட்டு வதக்கிக் கொள்ள வேண்டும்

Various source

அதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தக்காளி நன்றாக வதங்கியதும் 1 கப் தண்ணீரை ஊற்ற வேண்டும்.

அதனுடன் ஏற்கனவே மிக்ஸியில் அரைத்த பேஸ்ட்டை சேர்க்க வேண்டும்

பின்னர் கடாயை மூடி 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு மல்லித்தழை தூவினால் சுவையான வெங்காய கோஸ் தயார்.

சுவையான காரச்சார மிளகு குழம்பு ஈஸியா செய்யலாம்!

Follow Us on :-