வெயில் காலத்தில் தாகம் தணிக்கும் பழங்களில் ஒன்று தர்பூசணி. தர்பூசணி பழம் அதிக ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இதை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா என்பது குறித்து பார்ப்போம்.
Instagram
தர்பூசணி பழத்தில் 92 சதவீதம் நீர்ச்சத்து உள்ளதால் கோடை காலத்தில் சாப்பிட சிறந்த பழம் ஆகும்.
தர்பூசணியில் உள்ள விட்டமின் ஏ, விட்டமின் சி ஆகிய சத்துக்கள் உடலை சீராக வைத்துக் கொள்ள உதவுகின்றன.
இதில் புற்றுநோயிலிருந்து காக்கும் லைகோபீன் உள்ளிட்ட ஆண்டி ஆக்ஸிடெண்ட்கள் உள்ளன.
நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் தர்பூசணி சாப்பிடுவது செரிமானத்தை மேம்பட செய்கிறது.
Instagram
தர்பூசணியின் க்ளைசெமிக் லோக் குறைவானது என்பதால் நீரிழிவு நோயாளிகள் மிதமான அளவில் தர்பூசணி சாப்பிடலாம்.
Instagram
குறிப்பு: ஆரோக்கிய தகவலுக்காக வழங்கப்படுகிறது. மேலதிக அறிவுரைகளுக்கு மருத்துவ நிபுணரை அணுகவும்