வெள்ளை பூண்டை சரியான வெப்பநிலை, ஈரப்பதத்தில் வைத்து கருப்பு பூண்டு தயாரிக்கப்படுகிறது. பல்வேறு நாடுகளில் குறைந்த அளவிலேயே இந்த கருப்பு பூண்டுகள் புழக்கத்தில் உள்ளன. அரிதாக கிடைக்கும் இந்த கருப்பு பூண்டு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.
Various source
கருப்பு பூண்டில் இரும்புச்சத்து, விட்டமின் பி, சி, கே, செலினியம், கால்சியம் ஆகிய பல சத்துக்கள் உள்ளன.
இதில் தனித்துவமாக உள்ள ஆண்டி ஆக்ஸிடெண்ட்கள் அழற்சி எதிர்ப்பு தன்மையைக் கொண்டுள்ளது.
தினம் காலை கருப்பு பூண்டை பாலில் கலந்து குடித்தால் எடையை குறைக்க உதவும்.
வெதுவெதுப்பான பாலில் கருப்பு பூண்டு, தேன் கலந்து சாப்பிட்டு வர நோயெதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
Various source
கருப்பு பூண்டை காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை அளவு கட்டுப்படும்.
கல்லீரல் தொடர்பான பிரச்சினைகள் சரியாக கருப்பு பூண்டு நல்ல மருந்தாகும்.
கருப்பு பூண்டு சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தோல் சுருக்கங்கள் நீங்கி பொலிவடையும்.