ஆஸ்துமா பிரச்சினைகளை போக்கும் ஆயுர்வேத மருத்துவம்!

ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி உலகம் முழுவதும் பொதுவான உடல்நல பாதிப்பாக அறியப்படுகிறது. மோசமான சுற்றுசூழல், உணவுமுறை இதற்கு காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆயுர்வேத உணவுகள் ஆஸ்துமா பிரச்சினைகளில் தீர்வை தருகின்றன.

Various Source

பூண்டு மற்றும் குர்குமின் ஆகியவை அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டவை மற்றும் ஆஸ்துமாவைத் தூண்டும் சளியைக் கரைக்க உதவுகின்றன

இஞ்சியில் உள்ள காரத்தன்மை சளியை அகற்ற உதவுவதுடன், ஆஸ்துமா நோயாளிகள் எதிர்கொள்ளும் எரிச்சல் உள்ளிட்டவற்றை ஆற்றுகிறது.

ஆயுர்வேதத்தில் பிரபலமான துளசியானது அழற்சி எதிர்ப்பு, வைரஸ் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது.

சிற்றரத்தையை உலர்த்தி பொடி செய்து சாப்பிட்டு வந்தால் மூச்சு பிரச்சினைகளுக்கு நிவாரணம் அளிக்கும்.

Various Source

கண்டங்கத்திரி செடியை வேருடன் எடுத்து காய வைத்து பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிட்டு வரலாம்.

முசுமுசுக்கைக் கீரையை கஷாயம் செய்தோ, அடை போல செய்தோ சாப்பிட்டால் ஆஸ்துமாவிற்கு நல்ல பலன் தரும்.

தூதுவளை கீரையுடன் திரிகடுகம், தாளிசபத்திரி சேர்த்து கஷாயம் செய்து தேன் கலந்து சாப்பிட்டு வர மூச்சு பிரச்சினைகள் குறையும்.

வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிட்டால் ஏற்படும் மாற்றங்கள்!

Follow Us on :-