பப்பாளி விதையில் இத்தனை நன்மைகளா??

பப்பாளியின் காய் மற்றும் பழத்தைப் போலவே அதன் விதைகளும் ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்டவை.

Pexels

பப்பாளி விதைப் பொடியை தினமும் காலையில் எழுந்ததும், உணவு உண்பதற்கு முன்பு தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.

பப்பாளி விதையில் இருக்கும் சில கொழுப்பு அமிலங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கும்.

பப்பாளி விதையில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை சீராக்கவும், உடல் எடை குறைக்கவும் உதவுகிறது.

பப்பாளி விதைகளில் உள்ள கரோட்டின், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் உற்பத்தியை சீராக்கி மாதவிடாய் கோளாறுகளை நீங்கும்.

பப்பாளி விதையில் உள்ள சத்துக்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைக்க உதவுகிறது.

Pexels

உலர்ந்த பப்பாளி விதைகளை பொடி செய்து தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து தலையில் தடவினால் பொடுகு ஒழியும்.

Pexels

பப்பாளி விதையில் உள்ள மூலக்கூறுகள் நுண் கிருமிகளுக்கு எதிராக செயல்பட்டு, நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கும்.

Pexels

கர்ப்பிணிப் பெண்கள் பப்பாளி விதைகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

Pexels

சர்க்கரை நோயாளிகள், மூட்டு வலி உள்ளவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று சாப்பிடுவது சிறந்தது.

ஆரோக்கியத்திற்கு பிளாக் காபி சிறந்த தேர்வா?

Follow Us on :-