இன்னல் போக்கும் இலுப்பையின் அற்புத மருத்துவ பலன்கள்!
சாதாரணமாக கிராமங்களில் கிடைக்கும் பெரும்பாலானோர் கண்டுக் கொள்ளாத இலுப்பை மர வஸ்துகளானது பல்வேறு மருத்துவ தன்மையை கொண்ட தாவரமாகும். அதன் அற்புத மருத்துவ பலன்களை தெரிந்து கொள்வோம்.
Various Source
இலுப்பை பூவை நீரில் இட்டு காய்ச்சி வடிகட்டி காலை, மாலை குடித்து வர கடுமையான சளி, இருமல், சுரம் குறையும்.
இலுப்பை இலையை அரைத்து மார்பில் வைத்து கட்டி வர தாய்மார்களுக்கு பால் சுரப்பு அதிகரிக்கும்.
இலுப்பை பூவிற்கு பித்தத்தை தணிக்கும் தன்மை உண்டு. இலுப்பை பூவில் ரசம் செய்து சாப்பிடலாம்.
இலுப்பை பூவை பாலுடன் காய்ச்சி குடித்து வர ஆண்மை குறைபாடு பிரச்சினைகள் நீங்கும்.
Various Source
இலுப்பை மர பட்டையை உரித்து நீர் விட்டு காய்ச்சி சொறி, சிரங்கு உள்ள பகுதிகளை கழுவி வர காயங்கள் பட்டுப்போகும்.
இலுப்பை புண்ணாக்கை சுட்டு தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து தேய்த்து வர கரப்பான், கால்க்கடுவன் போன்ற ஒட்டுவாரொட்டிகள் குணமாகும்.
இலுப்பை புண்ணாக்கை சாம்பிராணி போல மூட்டம் போட்டு வைத்தால் அந்த புகைக்கு கொசு, பூச்சிகள், எலிகள் வீட்டை விட்டு அகலும்.