கடல் உணவுகள் என்றாலே பலரும் அதிகம் விரும்பும் உணவு மீன். ஆனால் மிக அரிதாகவே எடுத்துக் கொள்ளப்படும் கடல் உணவான இறால் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. அதுகுறித்து தெரிந்து கொள்வோம்.
Various Source
இறால்களில் கல் இறால், பவள இறால், பாறை இறால், புலி இறால் என பல இறால் வகைகள் உள்ளன.
இறால் உணவில் ஏராளமான புரதச்சத்தும், விட்டமின் டி சத்தும் அடங்கியுள்ளது.
இறாலில் கார்ப்போஹைட்ரேட் இல்லை. இதனால் உடல் எடை குறைக்க விரும்புபவர்களுக்கு இறால் நல்ல உணவு.
சூரியனிலிரிந்து கிடைக்கும் விட்டமின் டி இறாலிலும் உள்ளதால் சரும பாதுகாப்பிற்கும், இளமை தோற்றத்திற்கு இது உதவுகிறது.
இறாலில் உள்ள ஹெபாரின் என்ற பொருள் கண் பார்வை சிதைவு நோய்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது.
ஜிங்க் குறைப்பாட்டால் ஏற்படும் தலைமுடி உதிர்வு பிரச்சினைகளுக்கு இறால் உணவு நல்ல தீர்வு
இறாலில் ஏராளமான நல்ல சத்துக்கள் இருந்தாலும் அடிக்கடி சாப்பிடாமல் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை சாப்பிடுவது நல்லது
Various Source
ஆரோக்கிய தகவலுக்காக வழங்கப்படுகிறது. சந்தேகங்களுக்கு மருத்துவ நிபுணரை அணுகவும்.