பாரம்பரியமான அதிரசம் செய்வது எப்படி?

தமிழர்களின் பாரம்பரியமான பலகார வகைகளில் ஒன்று அதிரசம். எளிதான முறையில் வீட்டிலேயே சுவையான அதிரசம் செய்வது எப்படி என பார்க்கலாம்.

Various Source

தேவையான பொருட்கள்: பச்சரிசி அரைக்கிலோ, வெல்லம் அரைக்கிலோ, எண்ணெய், ஏலக்காய்

பச்சரிசியை நன்றாக கழுவி உலர்த்தி ரொம்ப நறநறவென்று இல்லாத அளவு அரைத்துக் கொள்ள வேண்டும்.

வெல்லத்தை உடைத்து வாணலியில் போட்டு கால் டம்ளர் அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும்.

வெல்லம் கொதித்து பாகு உருவானதும் அதை இறக்கி அரிசி மாவுடன் கலக்க வேண்டும்.

Various Source

கட்டிப்பிடிக்காமல் நன்றாக கலக்கி விட்டு கால் ஸ்பூன் உப்பு மற்றும் கொஞ்சம் ஏலக்காய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Various Source

மாவை 8 மணி நேரம் வரை ஆறவிட்டபின் அது கெட்டியாக மாறிவிடும்.

பின்னர் வாழை இலையில் எண்ணெய் தடவி மாவை கொஞ்சமாக எடுத்து உருட்டி அழுத்தி நடுவில் ஓட்டை போட வேண்டும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி இவ்வாறு ஒவ்வொரு உருண்டையாக தட்டி போட்டு பொன்னிறமாக எடுத்தால் சுவையான அதிரசம் தயார்.

யாரெல்லாம் பூசணி விதைகளை சாப்பிடலாம்!

Follow Us on :-