இந்திய பெண்களை பாதிக்கும் மைக்ரோநியூட்ரியண்ட் குறைபாடுகள்!
இந்தியாவில் உள்ள பெண்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் பல்வேறு ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெண்கள் பெரிதும் சந்திக்கும் ஊட்டச்சத்து குறைபாடுகள் குறித்து அறிவோம்.
Various Source
உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விட்டமின் சி 73.6 சதவீத பெண்களுக்கு போதிய அளவு கிடைப்பதில்லை என கூறப்படுகிறது.
ரத்தத்தில் ஹீமோகுளோபின் சுரக்க அவசியமான இரும்புச்சத்து 81% பெண்களுக்கு சரியாக கிடைப்பதில்லை என கூறப்படுகிறது.
கால்சியம் பற்றாக்குறையால் எலும்பு தேய்மானம், மூட்டு பிரச்சினைகளால் 77% பெண்கள் வயதான காலத்தில் பாதிக்கப்படுகின்றனர்.
கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிறப்பு குறைபாடுகளை தவிர்க்கும் ஃபோலேட் அமிலம் 63% பெண்களுக்கு குறைவாக உள்ளது.
Various Source
விட்டமின் பி12 ஊட்டச்சத்து குறைபாடால் பெண்கள் பலவீனமாகவும், சோர்வாகவும் ஆகிறார்கள்.
Various Source
மக்னீஷியம் சத்து குறைவதால் பெண்களுக்கு சர்க்கரை, ரத்த அழுத்த பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
நோய் எதிர்ப்பு, கண் பார்வை மற்றும் வளர்ச்சிக்கு அவசியமான விட்டமின் ஏ 7% பெண்களுக்கு குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.
ஊட்டச்சத்து சார்ந்த சந்தேகங்கள், விளக்கங்களுக்கு ஊட்டச்சத்து நிபுணரை அணுகவும்.