உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்கும் 7 ஆரோக்கிய பானங்கள்!!

இரும்புச்சத்து உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து நம்மை சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது.

Webdunia

பழங்கள் மற்றும் காய்கறிகளை கொண்டு தயாரிக்கப்படும் பானங்களில் இரும்புச் சத்து அதிகம். அவை என்னவென்று தெரிந்து கொள்வோம்.

உலர்ந்த கொடி முந்திரியில் இருந்து தயாரிக்கப்படும் ப்ரூன் ஜூஸில் தினசரி தேவையில் 17 சதவீதம் இரும்புச்சத்து உள்ளது. இது உடலை சுறுசுறுப்பாக ஆக்குகிறது.

பீட்ரூட் சாற்றில் உள்ள மாங்கனீஸ், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி ஆகியவை இரத்த சிவப்பணுக்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் நுகர்வை அதிகரிக்கின்றன.

பூசணிக்காய் சாற்றில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் தாதுக்கள் உடலுக்கு அன்றைய நாளுக்கு தேவையான சத்துக்களை வழங்குகிறது.

Webdunia

எலுமிச்சை, கொத்தமல்லி, கீரை மற்றும் வெள்ளரிக்காய் சேர்த்து தயாரிக்கப்படும் பச்சை சாறு உடலுக்கு இரும்புச்சத்தை வழங்குகிறது.

Webdunia

கீரையை அன்னாசிப்பழத்துடன் அரைத்து தயாரிக்கப்படும் சாற்றில் வைட்டமின் சி நிறைந்துள்ளது.

Webdunia

பேரீச்சம்பழம் மற்றும் மாதுளை சேர்த்து தயாரிக்கப்படும் பானம் உடலுக்கு இரும்புச்சத்தை வழங்குகிறது.

Webdunia

பால், தேன் மற்றும் எள் சேர்த்து குடித்தால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கிறது. எலும்புகள் வலுவடையும்.

Webdunia

பெட் ஷீட்டை அடிக்கடி மாற்றாவிட்டால் இவ்வளவு பிரச்சனை வருமா?

Follow Us on :-