அழகான முகத்தோற்றம் பெற எளிய யோக பயிற்சிகள்!

யோகா பயிற்சி செய்வது உடல், மன நலத்தை பாதுகாப்பது மட்டுமல்ல முக அழகையும் மேம்படுத்துகிறது. அழகான முக அமைப்பை பெறவும், பொலிவாக விளங்கவும் சில எளிய யோகா பயிற்சிகளை பார்ப்போம்.

Various Source

மீன் முக பயிற்சி: இதில் உதடுகளையும், கன்னங்களையும் உள்ளிழுத்து மீன் போல முகத்தை வைத்து பயிற்சி செய்ய வேண்டும்.

மேற்கூரை முத்தம்: முதுகு நேராக இருக்கும்படி நின்று மேற்கூரை நோக்கி அண்ணாந்து முத்தமிடுவது போல உதடுகளை சுருக்கி பயிற்சி செய்ய வேண்டும்

சிங்க நிலை பயிற்சி: இந்த பயிற்சியில் சிங்கத்தை போல நன்றாக வாயை அகல திறந்து கர்ஜித்து, மூச்சை மெல்ல இழுத்து வாயை மூட வேண்டும்.

மூச்சு பயிற்சி: இந்த பயிற்சியில் மார்பை உயர்த்திய நிலையில் மூச்சை ஆழமாக இழுத்து சில வினாடிகள் கழித்து மெல்ல விடுவிக்க வேண்டும்.

Various Source

கன்னத்தை உயர்த்துதல்: இரு கன்னங்களிலும் மூன்று விரல்களை வைத்து மேலும் கீழும் சில வினாடிகள் அசைக்க வேண்டும்.

நெற்றி பயிற்சி: இதில் இரண்டு கை விரல்களையும் நெற்றியில் வைத்து மெல்ல மூச்சை இழுத்துக் கொண்டே விரல்களால் நெற்றியை நீவி விட வேண்டும்.

சில யோகா பயிற்சிகளை செய்யும்போது யோகா நிபுணரின் வழிகாட்டுதல் மற்றும் உதவியுடன் செய்வது நல்லது.

மணமணக்கும் வெஜிடபிள் ரசம் செய்யலாம் வாங்க!

Follow Us on :-