வாரிசு படத்தை வெளியிட முடியாது? தயாரிப்பாளர் சங்கம் மறுப்பு

விஜய் நடித்து வம்சி இயக்கியுள்ள ‘வாரிசு’ படம் ரிலீஸாவதில் புது சிக்கல்!

Webdunia

நடிகர் விஜய் நடித்து வம்சி இயக்கியுள்ள படம் ‘வாரிசு’. இந்த படம் தெலுங்கில் ’வாரசடு’ என்ற பெயரிலும் வெளியாக உள்ளது.

இந்த படத்தை தமிழ், தெலுங்கில் பொங்கல் அன்று வெளியிட தயாரிப்பாளர் தில் ராஜூ திட்டமிட்டுள்ளார்.

ஆனால் தெலுங்கில் அதேசமயம் பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி படங்கள் வெளியாவதால் வாரிசு வெளியாக திரையரங்குகள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தற்போது தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் சங்கராந்தி போன்ற விசேஷ நாட்களில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும்.

Webdunia

அதுபோக மீத திரையரங்குகள் இருந்தால் மட்டுமே டப்பிங் படங்களுக்கு ஒதுக்கப்படும் என தில் ராஜூவை குறிப்பிட்டு தெரிவித்துள்ளனர்.

Webdunia

இதனால் விஜய்யின் வாரிசு படம் குறித்த நேரத்தில் தெலுங்கில் வெளியாகுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

Webdunia

என்ன பத்தி அவதூறா எழுதாதீங்க! பார்வதி நாயர் எச்சரிக்கை!

Follow Us on :-